புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோர் ஏமாறாது நன்மை பெற பயனுள்ள ஒரு செய்தி இது!!

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் கனடாவுக்கு புலம்பெயர்கின்றனர். அதைப் பயன்படுத்திக்கொண்டு மோசடி செய்து அப்பாவிகளை ஏமாற்றுவோரும் இருக்கிறார்கள். ஆக, புலம்பெயர்தலுக்கு உதவும் ஏஜண்டுகள் குறித்து சரியான அறிவை அளிப்பது இந்த மோசடிகளிலிருந்து அவர்களை காப்பாற்றுவதோடு சரியான ஏஜண்டுகளை தேர்ந்தெடுக்கவும் உதவும் என்பது நிச்சயம்.
Immigration Consultants of Canada Regulatory Council (ICCRC department Canada) என்னும் ஒழுங்கு முறை அமைப்பு, இத்தகைய போலி ஏஜண்டுகளைக் கண்டுபிடித்து அவர்களை கண்டிக்கிறது அல்லது தண்டிக்கிறது.
சரியான ஒரு புலம்பெயர்தல் ஆலோசகரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
1.அவர் ICCRCயில் பதிவு செய்த, உரிமம் பெற்ற ஒரு ஆலோசகராக இருக்கவேண்டும்.
2.அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டோ, அபராதம் விதிக்கப்பட்ட பின்னணியோ இருக்கக்கூடாது.
3.சட்டப்படி அவர் ஒப்பந்தம் செய்பவராக இருக்கவேண்டும்.
4.உண்மையும் வெளிப்படைத்தன்மையும் கொண்டவராக இருக்கவேண்டும்.
5.அவர் தெளிவான தகவல்களை உங்களுக்கு அளிப்பதுடன், நியாயமான கட்டணம் வசூலிப்பவராகவும் இருக்கவேண்டும் என்பது அவசியம் ஆகும்.