புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி ஏ9 வீதி விபத்தில் ஒருவர் பலி!! இன்னொருவர் படுகாயம்!! (Photos)

கிளிநொச்சி, ஏ 9 வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தென்னிலங்கையிலிருந்து யாழ். நோக்கி பயணித்த வான் ஒன்றும், எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே விபத்து நேர்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வானின் சாரதியின் தூக்கக்கலக்கம் காரணமாகவே சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை வானின் சாரதி கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery