யாழ் சென்பொஸ்கோ பாடலைக்கு அருகில் முகத்தை மூடி திரிந்த மர்ம நபரால் தீவிர தேடுதல்!!
யாழ்ப்பாணம் சென்.பொஸ்கோ வித்தியாலயத்திற்கு அருகில் முகத்தை மூடிக் கொண்டு
சந்தேகத்திற்கிடமான ஒருவர் அடிக்கடி நடமாடினார் என்ற தகவலையடுத்து, அந்த பகுதியில்
கடுமையான தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 8ம் திகதி பொஸ்கோ பாடசாலைக்கு அருகில் முகத்தை மூடியபடி மர்மநபர் ஒருவர்
பலமுறை நடமாடியதாக பிரதேசவாசியொருவர் என குறிப்பிட்டு பொலிசாருக்கு கடிதம்
அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த தகவலையடுத்து அந்த பகுதியில் இன்று மாலையில்
கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அந்த பகுதியிலிருந்த சிசிரிவி காணொளிகளையும் பொலிசார் சோதனை செய்கிறார்கள்.