புதினங்களின் சங்கமம்

எங்கட அரசாங்கமும் கொலைகார டிப்பர்களும்……

எமது அரசாங்கம்
இந்த கொலைகார டிப்பர் வாகனங்களை இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 5 மணி வரை மட்டுமே வீதியில் பயணிக்க முடியும் என்று ஒரு சட்டம் நிறைவேற்றினால் எத்தனை பேர் ஆதரவு அளிப்பீர்கள்..
நடைபெறும் உயிர்சாவு விபத்துக்கள் 70 சதவீதம் டிப்பர் வாகனத்தாலே நடை பெறுகிறது .. சாரதி இருப்பது அவ்வளவு உயரம். குனிந்து பாக்க மாட்டார்கள் காதுக்குள் தொலைபேசி தொலைநோக்கு பார்வை .
ஒடுபவர்கள் மனிதர்களா மிருகங்கள் கூட அடுத்த உயிரினத்தில் இரக்கம் கொண்டது.
இரவில் மட்டும் அனுமதிப்பது என்பது போதாது. மண் ஏற்றும் ரிப்பர்கள் ஒரு பெர்மிற்றில் ஒரு தரம் சட்டப்படியும் 3-4 தடவை கள்ள மண்ணும் ஏற்றுவதற்காக கண் மண் தெரியாமல் ஓடுவது, நல்ல பொலிசிடம் பிடிபடாமல் இருப்பதற்காக விளக்குகளின்றி வீதியோரங்களில் நேரம் வரும் வரை ஆபத்தான முறையில் தரித்து நிற்பது, குறுக்கு வீதிகளால் செல்வது, பலமான வாகனம என்பதால் விபத்தில் சேதம் ஏறபடாது என ஏற்படும் அலட்சியம், விபத்தின் பின்னும் சாரத்தியம் தொடர்ந்து செய்ய முடியும் என்றவாறான சட்டங்கள, மிக நேர்மையானவர்கள் கூட கள்ள மண் வாங்கத்துணிவது. அதற்குக்காரணமான மண் மஃபியா, இதையெல்லாம் நிவர்த்தி செயவதற்கான அதிகாரமின்மை என பல காரணிகள் உள்ளன.
இன்று எனது நண்பனின் சகோதரி நாளை நீயோ நானோ.
இதற்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் .
இல்லையேல் ?
நாம் இனம் ஒற்றுமையுடன் வாழ்ந்த தசாப்தம் முடிந்து அல்லவா
எவர் செத்தால் எமக்கு என்ன . நம்ம விட்டில் இழப்பு வந்தால் சிந்திப்போம்..
பகிர்ந்து கொள்ளுங்கள் ??