புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த கார் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவையாறு இரண்டாம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஒரே இடத்தில் குறித்த வாகனம் அசையாமல் இருந்ததை அவதானித்த அப்பகுதி மக்கள், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், குறித்த காரை மீட்டு ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், இந்த வாகனம் வடக்கு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு கொள்ளைச் சம்பவம் அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.