புதினங்களின் சங்கமம்

கொழும்பைக் காட்டிலும் யாழின் நிலையே படு மோசம். தயவு கூர்ந்து உணர்வுபூர்வமாக உள்வாங்குங்கள்

கொழும்பைக் காட்டிலும் யாழின் நிலையே படு மோசம். தயவு கூர்ந்து உணர்வுபூர்வமாக உள்வாங்குங்கள். தொற்றுக்கான மரண வீதத்தில் யாழ்ப்பாணம் முன்னிலை 2% நாடாளவிய வீதம் 1.8%
முக்கியமாக நாடாளவியரீதியில் 60வயதுக்கு மேற்பட்டோர் சதவீதம் யாழ்ப்பாணத்திலேயே அதிகம். ஆம்
621000 பேரில் 110 000 பேர் . இது ஏறத்தாழ 1/6 பங்கு. நாட்டின் ஏனைய மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மொத்த தொகையில் 1/10.
பிறப்பு வீதம் குறைந்த / இளைய தலைமுறையில் கணிசமானோரை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கின்ற யாழ் மாவட்டம் கொரோனாவினாலும் ஆட்டம் காணும் போது இப்போது எரிக்க சுடலையில் முடியாது உள்ள நிலை போன்று (தினமும் 5 கொரோனா மரணம் . 4 உடலே மின் தகனம் செய்ய முடியும்) கோயிலில் வழிபடுவதற்கும் எதிர்காலத்தில் ஆட்கள் இல்லாமல் போய் விடக் கூடிய நிலையை நாம் மனம் கொள்ள வேண்டும்.