பிரான்ஸ் பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் கடந்த 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வீடு ஒன்றில் இருந்து தாய் மற்றும் மகள் ஆகிய இருவரது சடலங்களை பொலிஸார் மீட்டிருந்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த இராஜதுரை விஜயசிறி (வயது-51) மற்றும் இராஜதுரை டிலக்சனா (வயது-21) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைத் தேடி பிரான்ஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் இரு மகன்களும் பொந்துவாஸ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
முழுமையான விசாரணை விபரங்களை உங்கள் vampan.net இல் விரைவில் எதிர்பாருங்கள்…..