Home புதினங்களின் சங்கமம் யாழில் ஆவாகுழு காவாலி வாள்கள் மற்றும் இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளுடன் கைது!!

யாழில் ஆவாகுழு காவாலி வாள்கள் மற்றும் இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளுடன் கைது!!

யாழ்.அளவெட்டியில் வாள்வெட்டு குழு உறுப்பினர் வாள்கள் மற்றும் இலக்க தகடற்ற மோட்டார்
சைக்கிள்களுடன் கைது..

யாழ்.அளவெட்டி – நாகினாவத்தை பகுதியில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடாபுடைய ஒருவர்
தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு்ள்ளார்.

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபரே
இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 வாள்கள் மற்றும் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிள்
ஆகியனவும் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.