கொரோனா தடுப்பூசி மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா??? யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பேஸ்புக்கில் வந்த தகவல் என்ன??
ஒரு குழந்தை மருத்துவராக, தடுப்பூசிகள் பற்றிய ஆய்வு என்பவற்றில் நான் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன்.
அது தொடர்பான ஆய்வுகளில் நான் தினம் ஈடுபடுகிறேன் .
எண்ணற்ற நோயாளிகள் தடுப்பூசி குறித்தான கேள்விகளுடன் என்னிடம் வந்திருக்கிறார்கள் – அவர்களுக்கு பதில் சொல்வதில் நான் எப்போதும் மகிழ்ச்சியடைகிறேன்.
பெரும்பாலானவர்கள் சாரமாரியான கேள்விகளுடன் வருகிறார்கள். ஆனால் அவை எப்போதுமே ஆன்லைனில் அல்லது நண்பரிடமிருந்து கேட்ட உறுதிபடாத ஒன்றைப் பற்றியது. இது மலட்டுத்தன்மையை (infertility) ஏற்படுத்துமா? இது எனதுDNA ஐ மாற்றுமா?
டெல்டா அபரிமிதமாக அதிகரித்துவரும் இந்த காலபகுதியில் அனைவருமே vaccine எடுப்பது சால சிறந்தது என நான் என் நோயாளர்களுக்கு அறிவுரை வழங்குகிறேன், ஆயினும் சிலருக்கு சிந்திக்க இன்னும் நேரம் தேவை என புலம்புகிறார்கள்.
நான் அதை முழுமையாக புரிந்துகொண்டு, அடுத்த வருகையில் மீண்டும் பேசுவோம் என்று எப்போதும் அவர்களிடம் சொல்கிறேன்.
ஆனால் நான் அவர்களுக்கு காலம் தாழ்த்துவத்தின் விளைவை மீண்டும் மீண்டும் நினைவூட்ட தவறுவதில்லை ஏனென்றால் இது மிகவும் முக்கியமான முடிவு!
உயிர் காக்கும் கவசமாகும்!
என் அன்புக்குரிய ஒரு இளமையான ஆரோக்கியம் நிறைந்த நோயாளிகளில் ஒருவர் மிகவும் தயங்கினார் vaccine எற்பதை குறித்து,ஆயினும் நான் அவளுக்கு சிறந்த அறிவுரை கொடுக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன் – அவர் கருவுறாமை கட்டுக்கதையைப் பற்றி கேள்விப்பட்டதாகவும் , அதுக்குறித்து பெரிதும் தயங்குவதாகவும் கூறினார்.
மேலும் அவர் குறிப்பிட்டார் தான் “இளமையாகவும் ஆரோக்கியமாகவும்” இருப்பதால் தனக்கு vaccine உண்மையில் தேவையில்லை என்றும் அவள் அதைப் பற்றி மேலும் சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாள்.எனக்கு அவரை குறித்து மிகுந்த ஆதங்கம் ஏற்பட்டது, ஆனால் என்னால் முடிந்தவரை மட்டுமே முயற்சி செய்ய முடியும்.
முடிந்தவரை மாத்திரமே அறிவுரைகளை வழங்க முடியும்!
இதனை யார் மீதும் திணிப்பது என் கொள்கை அல்ல. துரதிர்ஷ்டவசமாக, அவள் இப்போது ஐசியுவில் கோவிட் உடன் இருப்பதாக நான் கேள்விப்பட்டபோது இதயத்தை ஒரு மில்லியன் துண்டுகளாக உடைத்தது அத்தகவல்.
என் நோயாளிகள் தயங்குவதனை நான் ஒருபோதும் குற்றம் சாட்ட மாட்டேன் – தவறான தகவலை பரப்பியவர்களை தான் நான் குற்றம் சாட்டுவேன் . அவரின் இந்த நிலைமைக்கு காரணம் அவர் கேட்ட கட்டுக்கதைகளும் அதனை பரப்பிய சமூக பொறுப்பற்ற மனிதர்களுமே ஆகும் .
பொய்யான தகவல்களைப் பரப்புபவர்களே நீங்கள் ஒரு அறிவுரை வழங்கும் முன் ஆயிரம் முறை சிந்தியுங்கள்.
ஒரு மனிதனின் உயிரை காக்கும் vaccine ஐ பார்க்கிலும் சிறப்பான இன்னொரு மாற்றுதிட்டத்தை உங்களால் தரமுடிந்தால் மாத்திரமே உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
நீங்கள் “இளமையாகவும் ஆரோக்கியமாகவும்” இருப்பதால் உங்களுக்கு ஷாட் தேவையில்லை என்று நீங்கள் நினைத்தால் – co morbidities எதுவுமே இல்லாத பல பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். அதைத் தவிர, நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி உங்கள் ஷாட் ஆகும். ஷாட் உங்களுக்காக மட்டுமல்ல – மற்றவர்களைப் பாதுகாப்பதற்காக!
தடுப்பூசி போடுவதைக் கருத்தில் கொள்ளவும்!
தயவுசெய்து SHARE & Follow செய்யுங்கள்!
தடுப்பூசி குறித்து எல்லாவிதமான உண்மை தகவல்களையும் இந்த பக்கத்தில் அன்றாடம் பதிவிடுவோம்.
இந்த தகவல் எமக்காக வழங்கியது Dr. Risa Hoshino, MD
இவர் பிரபலம் வாய்ந்த குழந்தை நலநிபுணரும், vaccine குறித்தான துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்.

