புதினங்களின் சங்கமம்

யாழ்.பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த 140 பேருக்கு யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவர்களில் மாணவி ஒருவர் மட்டும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி வெளிமாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்றும் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

மாணவி விஞ்ஞான பீடத்தினைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.