தற்கொலைத் தாக்குதலிற்கு வெடிமருந்து வழங்கியது யார்? கருணாவின் திடுக்கிடும் வாக்குமூலம்..
இது போன்ற அமைப்புகளுக்கு நிதி வழங்கியது யார் என கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
இது போன்ற அமைப்புக்கு வெடிமருந்து வழங்கியது யார்? ஏனெனில் அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து தான் இதிலே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வெடிமருந்தென்பது அரசாங்கத்தின் பாவனையில் இருக்கிறது. இது போன்ற வெடிமருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டும் என்றால் வெளிநாடுகளில் இருந்து தான் கொள்வனவு செய்ய வேண்டும்.
இந்த வெடிமருந்து எவ்வாறு இங்கு கொண்டு வரப்பட்டது என்பதை அரசாங்கம் இன்னும் வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க வேண்டும். இன்று இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வெளிநாட்டிலுள்ள பல முஸ்லிம் வர்த்தகர்களுக்காக திறந்து விட்டார்கள்.
அவர்கள் என்ன நோக்கத்திற்காக நுழைந்தார்கள், என்ன நோக்கத்திற்காக இந்த வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன என்பதை நாம் முதலில் தெளிவாக்க வேண்டும்.
அதில் ஒரு அங்கமாக தான் புனானையில் கட்டப்படுகின்ற இந்த அரபுக் கல்லூரியை நாங்கள் பார்க்கின்றோம்.
ஏனென்றால் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் இன்று அந்த பாரிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
கோடிக்கணக்கான நிதிகள் இதில் செலவிடப்படுகின்றன. இந்த கல்லூரிக்கான அனுமதி பெறப்பட்டிருந்தாலும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பாடங்கள் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.
கிங் அப்துல்லா யுனிவர்சிட்டி கொலேஜ் என்ற பெயரை தான் சூட்டுவதற்கு இருந்தார்கள். ஆனால் அந்த பல்கலைக்கழகம் மூடப்பட்டு கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
அல்லது அரசுடமையாக்கப்பட வேண்டும். அதிலுள்ள பாடத்திட்டங்களை ஆராய்ந்தால் இதன் உள்நோக்கம் உங்களுக்கு விளங்கும் என்பதை கூறிக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.