புதினங்களின் சங்கமம்

ரிசாத் மனைவி மற்றும் குடும்பம் கூண்டுடன் விளக்கமறியல்!! சிறுமியின் சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவு!! கொலை என சந்தேகம்!!

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி தீ காயங்களுடன் உயிரிழந்த
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரையும் ஓகஸ்ட்
மாதம் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (26) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில்,
மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜெயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அத்துடன் உயிரிழந்த சிறுமியின் சடலத்தை மீண்டும் பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்காக,
தோண்டி எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதே வேளை

ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்த சந்தர்ப்பத்தில் தீக்காயங்களுடன் உயிரிழந்த 16 வயதுடைய ஜுட் குமார் ஹிஷாலினியின் வசிப்பிடமான டயகம பகுதிக்கு விஷேட பொலிஸ் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு வேலைக்கு அழைத்து வந்த ஏனைய சிறுமிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே இவ்வாறு விஷேட பொலிஸ் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரிஷாட் பதியுதீனின் குடும்பத்தினருக்கு வேலை செய்வதற்காக 11 சிறுமிகள் அழைத்து வரப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் கடமையாற்றி 22 வயதுடைய யுவதியிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.