Home புதினங்களின் சங்கமம் புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகள் நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டன!

புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகள் நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டன!

2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தரப்பரீட்சை என்பன மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பினை கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில்,

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 14 ஆம் திகதியும்,

உயர்தரப்பரீட்சை நவம்பர் 15 தொடக்கம் டிசம்பர் 10ஆம் திகதி வரையும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.