பாண்டியன்குளத்தில் வாள் வெட்டு! குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்…!

பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் நடாத்திய வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அதே இடத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா யாதவராசா (வயது-43) என்பவரே படுகாயங்களுக்குள்ளானார்.
படுகாயமடைந்தவர் மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

error

Enjoy this blog? Please spread the word :)