புதினங்களின் சங்கமம்

தளர்த்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள்! மீண்டும் அமுல்படுத்தப்படுமா?

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு முன்னரை போன்றே அமுலில் இருக்கும்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் ஜுலை மாதம் 5ம் திகதி வரை அமுலில் இருக்கும் என அவர் கூறுகின்றார்.

இதேவேளை, பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள போதிலும், பொது போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்கு இடையில் மாத்திரமே செயற்படும்.

இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாண எல்லைகளை தாண்டி அத்தியாவசிய சேவைகளுக்காக சில பொது போக்குவரத்துக்களை ஈடுபடுத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் போக்குவத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டதுடன், இன்று அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளது.

எனினும் வீட்டில் இரண்டு பேர் மாத்திரமே வெளியில் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், பட்டியல்படுத்தப்பட்டுள்ள தொழில் நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதிக்குமாறு சுகாதார தரப்பினர் அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கவரும் சூழலில் இன்றைய தினம் நடைபெறவுள்ள கொவிட் தொடர்பிலான ஜனாதிபதி செலணியில் இதுகுறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.