புதினங்களின் சங்கமம்

யாழில் 12 வருடங்களின் பின் குடும்பத்துடன் இணைந்த அரசியல் கைதி!(Photos)

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கைதிகளில் 16 தமிழ் அரசியல் கைதிகளும், 77 சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையிலேயே யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் பயங்கரவாத தடுப்பு தடைச்சட்டத்தின் கீழ் 2009 மே 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

May be an image of 1 person and beardMay be an image of 1 person, standing, motorcycle and roadMay be an image of 2 people, people sitting, people standing and outdoors