புதினங்களின் சங்கமம்

தடையினை மீறி ரியூசன் வகுப்பு: கூண்டோடு தனிமைப் படுத்தப்பட்டோரில் 31 பேருக்கு கொரோனா!

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி தனியார் வகுப்பினை நடாத்திய குற்றச்சாட்டில் தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 31 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

கண்டி மாவட்டம் கட்டுகஸ்தோட்டையில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி தனியார் வகுப்பு இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து குறித்த தனியார் கல்வி நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என 58 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோரில் 31 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட இவர்களில் பிசிஆர் அறிக்கையின் படி குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்ட பகுதி சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.