புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (14.06.2021)

மேஷம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். துணிச்சலுடன் செயல்படும் நாள்.

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக நடைபெற இருந்த மனப்போர் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் எளிதாக முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். நல்ல மாற்றம் ஏற்படும் நாள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

சிம்மம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.

துலாம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள் . தொழிலில் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுக பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்து கொள்ளுங்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

மகரம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும் . வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள் . தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.