பிரான்ஸ் லாச்சப்பில் இரத்தத்தை உறுஞ்சும் தமிழ் முதலைகள்!! நடப்பது என்ன?

பேஸ்புக்கில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..

 

பிரான்ஸ் நாட்டில் வாணிபங்கள் நாடத்தும் தமிழ் முதலைகள்.
அரச விடுமுறை நாட்களில் ஐரோப்பாவில் கல்வி கூடங்கள், அரச அலுவலகங்கள்,வாணிப நிலையங்கள் யாவும் இயங்காது. ஆனால் பிரான்ஸ் நாட்டில் லாச்சப்பல் எனும் இடத்தில் தமிழர்கள் நடத்தும் சில்லறை கடைகள்,உடுப்பு கடை, உணவகங்கள் மட்டும் தம் கீழ் வேலை செய்யும் தம் தமிழ் ஊழியர்களுக்கு விடுமுறையை வழங்காது இரத்ததை உறிஞ்சி எடுத்து தம் கல்லால் பெட்டிக்குள் காசை சேர்த்து கையிலாயம், கொண்டு தாம் இறந்த பின் சவப்பெட்டியில் அடுக்கி கொண்டு போகலாம் என்று தமிழ் முதலாளிமார்கள் காசு ஆவேசம் பிடித்து இவ் நாளிலும் கடையை திறந்து வைத்து இருத்தல் என்பது இடங்கள் மாறினாலும் தமிழன் குணங்கள் மாறாது என்பதற்கு சாலசிறந்த உதாரணம்.
அங்காடித்தெரு படத்தின் நடக்கும் காட்சிகளை நீங்கள் நேரில் காண வேண்டும் என்றால் லாச்சப்பலுக்கு சென்று பார்வையிடுங்கள், விசா இல்லாது மாடாய் உழைக்கும் தமிழ் இளைஞ்சர்களை நேரில் நினைவு கூற வைத்திடும் லாச்சப்பலில் வாணிபங்களில் அடிமாட்டு சம்பளத்துக்கு வேலை செய்யும் தமிழ் இளைஞர், யுவதிகள்.
இவ்வாறு பண ஆசையில் திறந்து வியாபாரம் நடத்தும் கடைகளில் விடுமுறை நாட்களில் தமிழர்கள் நீங்கள் பொருட்களை கொள்வனவு செய்யாதீர்கள். இப்படி நீங்கள் செய்தால் விடுமுறை நாளில் வியாபாரம் மந்த கதியில் நடக்க எதிர்வரும் விடுமுறை நாட்களில் முதலாளிமார்கள் அதுதான் தமிழ் முதலைகள் கடையை திறக்க பின்வாங்குவாங்கள் இதனால் அங்கு அடிமாட்டு சம்பளத்துக்கு வேலை செய்யும் விசா இல்லாத தமிழ் ஊழியர்களுக்கு விடுமுறை நாளில் ஆவது ஓய்வு கிடைக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)