புதினங்களின் சங்கமம்

பாலியல் இலஞ்சம் பெற்றதாக செங்கலடி பிரதேச செயலாளர் மீது பொலீசில் முறைப்பாடு!

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம் அவர்கள் என்னிடம் இருந்து பாலியல் இலஞ்சம் பெற்றுக்கொண்டதன் பின்னர் தற்போது என்னை அச்சுறுத்தி வருகிறார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பொலீஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து tell igp ஊடாக இந்த முறைப்பாடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் குறித்த முறைப்பாட்டில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
ஆயிர்வேத சிகிச்சை நிலையம் ஒன்றை நிறுவுவதற்காக ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குச் சென்ற எனக்கு எல்லாம் செய்து தருவதாக கூறி 02/05/2021 அன்று என்னை பிரதேச செயலகத்திற்கு அழைத்து பாலியல் இலஞ்சம் பெற்றுக்கொண்டார். அப்போது பிரதேச செயலகத்தில் பணி புரியும் பல பெண்களுடன் அவர் ஒன்றாக இருந்த வீடியோவை அவர் எனக்கு காட்டினார். அதில் ஒரு பெண்ணின் வீடியோ அதிகமாக இருந்தது. அந்த பெண் குறித்து விசாரித்து பார்த்ததில் அந்த பெண் பிரதேச செயலகத்தில் பணி புரியும் பெண் என தெரியவந்தது.
இவருடைய தொழிலே இதுவாகத்தான் இருந்துள்ளது. பல பெண்களுடன் பாலியல் இலஞ்சம் பெற்றுள்ளார். தற்போது வாட்ஸ்அப் மூலம் என்னுடனான உரையாடல்கள் வெளிவந்ததன் பின்னர் எனக்கு பல கொலை அச்சுறுத்தல்கள் வந்துகொண்டே உள்ளது. என்னை தேடி சிலபேர் விசாரித்துச் சென்றுள்ளனர். எனக்கு பயமாக உள்ளது.
இதற்கு காரணம் வில்வரெட்ணம் பிரதேச செயலாளரே. அவருக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பொலீசில் முறைப்பாடு செய்து அதன் பிரதியை தனக்கு அனுப்புமாறு ஒருவரிடம் சொல்லி அனுப்பி இருந்தார். நான் அதற்கு உடன் படாத காரணத்தினால் தற்போது எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கிறார். எனக்கு பயமாக உள்ளது. எனக்கு பாதுகாப்பு இல்லை என்னை போன்று பல பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இது குறித்து தற்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.