Home புதினங்களின் சங்கமம் முல்லைத்தீவு பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் அடித்துக் கொலை!வீடியோ

முல்லைத்தீவு பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் அடித்துக் கொலை!வீடியோ

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (24) அதிகாலை 2 மணியளவில் தந்தை தாய் மகள் ஆகிய மூவர் உறங்கிக்கொண்டிருந்த வேளை வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் தந்தை தாய் இருவரையும் தலையில் தாக்கிய நிலையில் மகள் கூக்குரலிட்டதை தொடர்ந்து அயலவர்கள் ஓடிச்சென்று அவர்களை மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

யார் எதற்காக இந்த செயலை செய்தார்கள் என்பது தொடர்பில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு தடயவியல் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் புலனாய்வுப் பிரிவினர் என பல்வேறு தரப்பினர் வருகைதந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்தவர்களின் உடலங்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments