யாழ் வடமராட்சியில் 125 கிலோ கஞ்சா சிக்கியது!!
வடமராட்சி கிழக்கு பூனத் தொடுவாய் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 125 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இக் கஞ்சா தொகுதியை மீட்ட பளைப் பொலிஸார் குறித்த பகுதியில் கஞ்சா எவ்வாறு கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பகுதியில் மர்மமான பொதி ஒன்று இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் அது தொடர்பில் பொலிஸாருக்கும், விசேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கினர்.
தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டதை அடுத்து, பொதிக்குள் கஞ்சா இருப்பது இனங்காணப்பட்டது.
கஞ்சா தொகுதியினை மீட்ட பொலிஸார், அவை படகின் மூலம் கொண்டுவரப்பட்டு, விற்பனைக்காக அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், மறைத்து வைத்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.