கோப்பாய் MOH பிரிவில் 25 பேருக்கு கொரோனாத் தொற்று!
யாழ்ப்பாணம் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினரால் தொற்றாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில்
12, 15 வயதுகளை உடைய சிறுமிகள் இருவரும் 08, 13 வயதுகளையுடை சிறுவர்கள் இருவரும் உள்ளடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் சில சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் தொற்றாளர்கள் விபரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. விபரங்களை விரைவில் வெளியிடப்படும்.

