யாழில் ஒரு வருடத்தின் முன் ஆமிக்கு அடித்த முன்னாள் போராளி ஆயுதங்களுடன் கைதாம்!!
வெடிகுண்டு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நாகர்கோவிலில் முன்னாள் போராளி ஒருவர் இன்று காலை படைத்தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு இராணுவத்தினரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு தலைமறைவாகிய நிலையில் குடும்பத்தாரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றின் ஊடாக விடுதலையான ஐங்கரன் என்ற முன்னாள் போராளியே இன்று கைதாகியுள்ளார்.
அவருடைய மீன்பிடி வாடியில் பொதி ஒன்றில் ஆயுதங்களை மீட்டிருப்பதாக தெரிவித்த பின்னரே படையினர் அவரைக் கைது செய்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருடைய கைது நாகர்கோவிலில் உள்ள அவருடைய வீட்டிலேயே இடம்பெற்றிருக்கின்றது.
விசாரணையின் பின்னர் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

