கிளிநொச்சிப் பகுதியில் கடுகதி ரயில் விபத்து!! சிதறியது உழவு இயந்திரம்!! (Video)
சற்றுமுன் உமையாள்புரம் பகுதியில் யாழ்தேவி விபத்து!
யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த
யாழ்தேவி கடுகதிப் புகையிரதம் உமையாள்புரம் பகுதியில் உழவு இயந்திரம்
ஒன்றுடன் சற்றுமுன் விபத்துக்குள்ளாகியது
குறித்த விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்துள்ளதுடன் சாரதி எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பியுள்ளார்.
அறிவியல் நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் கழிவு அகற்றலை
மேற்கொண்டு வரும் இவ் உழவு இயந்திரம் கழிவுகளை கொட்டிவிட்டு திரும்பிச்
செல்லும் போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.