புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் சில தமிழர்களின் பண ஆசை!! பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்படும் அபாயம்

பிரான்சில் ஒருசில தமிழர்களின் பண ஆசையால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்படும் அபாயம்
பிரான்சில் நீங்கள் தனியாக தொழில் செய்வதாக இருந்தால் சட்டப்படி அரசாங்கத்தில் பதிவு செய்து உங்கள் ஆண்டு வருமான வரியை அரசுக்கு காட்டி லாபத்தில் அரசாங்கத்துக்கு வரி செலுத்த வேண்டும் ,
ஆனால் பல தமிழர்கள் அரசாங்கத்தில் பதிவு செய்யாது பகுதி நேரமாக தங்களது முயற்சியால் சிறு தொழில்களை செய்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே …..
புகைப்படம் எடுத்தல்
வீடு திருத்த வேலைகள்
கார் திருத்துதல்
இரும்பு ஒட்டு வேலைகள்
நீர் பைப் திருத்துபவர் என நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு சில தேவைகளை குறைந்த செலவுடன் நிறைவேற்றி வருகின்றோம்
இப்படியான தொழில் செய்பவர்களை வைத்து ஒரு சிலர் தமிழர்கள் பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர் , ஆனால் இவர்களால் பாதிக்கப்படப் போவது மேலே குறிப்பிட்ட வேலைகளை செய்து வருபவர்களே……
மேற்குறிப்பிட்ட வேலை செய்பவர்களின் பெயர், தொலைபேசி இலக்கம் என்பவற்றை இணையத்தளங்களை உருவாக்கி அதில் இணைத்து விடுவார்கள் , ஆனால் இவர்களின் இந்த தகவல்களை நம்மவர்களே அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தி விடுவார்கள்,
பிரான்சில் இணையத்தைக் கண்காணிக்க பல போலீஸ் பிரிவுகள் இருக்கின்றன , அத்துடன் february மாதத்தில் இருந்து இணைய விற்பனைகளை கண்காணிக்க புதிதாக ஒரு பிரிவு போலீசார் செயல்பட தொடங்கியுள்ளனர்.
இப்படியான தொழில் செய்பவர்கள்
தொடர்பான தகவல்கள் அரசுக்கு தெரியவரும் பட்ச்சத்தில் வருமானவரித்திணைக்கள அதிகாரிகள் அரசாங்கத்தில் பதிவில்லாத பகுதிநேர வேலை செய்பவர்களை வீடு வீடாக தேடி கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தி தண்டனையுடன் அபராதம் விதிப்பர் , இது தான் நடக்கப் போவது ,
இதைவிட வதிவிட உரிமை இல்லாமல் பல தமிழர்கள் இப்படியான தொழில்களை செய்து வருகின்றனர் இவர்கள் பிடிபடடால் ஒருசில வேளைகளில் நாடு கடத்தப்படும் அபாயமும் இருக்கின்றது
இதில் இருந்து நீங்கள் தப்பிக்க, எந்தவொரு காரணத்துக்காகவும் உங்கள் தரவுகளை இணையத்தில் ஏற்ற சம்மதம் தெரிவிக்காதீர்கள் , ஒரு வேளை உங்களுக்குத் தெரியாமல் உங்கள் தகவல்கள் இணையத்தில் வலம் வந்தால் உடனடியாக இணைய தளத்தை நடத்துபவருடன் தொடர்பு கொண்டு இணையத்தில் இருந்து தகவல்களை நீக்கி விடுங்கள் ,
உங்கள் வருமானம், உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளிலேயே
இந்த தகவலை உங்கள் உறவுகள் நண்பர்களுடன் shere செய்யுங்கள்