இலங்கையில் சற்று முன்னதாக மேலும் 2 ஆயிரத்து 254 பேருக்கு தொற்றுறுதி!!
இலங்கையில் சற்று முன்னதாக 2 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் புது வருட கொத்தணியுடன் தொடர்புபட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

