புதினங்களின் சங்கமம்

பளையில் இராணுவம் சுற்றிவளைப்பு..! 2 கிலோ வெடிமருந்துடன் இருவர் கைது

பளை – வண்ணாங்கேணி பகுதியில் 2 கிலோ வெடிமருந்துடன் இருவரை இராணுவத்தினர் கைது
செய்திருக்கின்றனர்.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடைப்படையில் இன்று அதிகாலை குறித்த
நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன்

வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதாகிய இருவரும் பளை பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் இன்று மாலையே தெரியவரும்
என்று பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.