புதினங்களின் சங்கமம்

யாழ்.மாவட்டச் செயலகம், பூநகரி பிரதேச செயலக ஊழியர்கள் ஐவருக்கு கொரோனா..!!!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் மற்றும் கிளிநொச்சியின் பூநகரி பிரதேச செயலக ஊர்கள் 05 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டச் செயலகம் (கச்சேரி)யில் இருவரும், பூநகரி பிரதேச செயலகத்தில் மூவருக்கும் (சமுர்த்தி உத்தியோகத்தர்கள்) தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் நேற்று 61 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.