புதினங்களின் சங்கமம்

இலங்கையில் கொரோனாவால் கர்ப்பிணித் தாய்மார்கள் கடுமையான ஆபத்தில்!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதால் இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் கடுமையான ஆபத்தில் உள்ளனர் என மகப்பேறு வைத்தியர் சனத் லன்ரோல் (Dr Sanath Lanerolle) தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக மாதத்திற்கு சுமார் 20 கர்ப்பிணித் தாய்மார்கள் இறக்கும் அபாயம் உள்ளது மற்றும் சுமார் 340,000 தாய்மார்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இன்னும் கொரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை என்றும் அவர்களுக்கு ஃபைசர் (pfizer) மற்றும் மொடோர்னா (moderna) தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தடுப்பூசி வழங்குமாறு பல கோரிக்கைகள் இருந்தபோதிலும், அது இன்னும் பெறப்படவில்லை என்று அவர் கூறுகிறார். இந்த நிலைமை காரணமாக அடுத்த தலைமுறை ஆபத்தில் இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
Chamuditha இன் யூ ரியூப் இணைய சனலில் நடந்த நேர்காணலில் பங்கேற்றயபோது வைத்தியர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.