புதினங்களின் சங்கமம்

ஊரடங்கு திருவிளையாடல்!! 72 ரின் பியருடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது!!

72 ரின் பியருடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுர பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய இன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவை மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் விற்பனைக்கு தயார் நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிசார் வழங்கு தொடரவுள்ளனர்