முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இரவோடு இரவாக அடித்துடைப்பு! (Photos)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நெருங்கிவரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி இன்று அதிகாலை அடித்து நொருக்கப்பட்டுள்ளதோடு நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பொது நினைவுக்கல்லும் இரவோடு இரவாக களவுபோயிருக்கிறது.
நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் பகுதியில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்கான ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவுக்கல்லினை கொண்டுவந்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் எவ்வித நிகழ்வுகளையும் நடத்தக்கூடாது என இராணுவம் மற்றும் பொலிஸார் கடும் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
நினைவுக்கல் இருந்த இடம் தெரியாது அகற்றிச் செல்லப்பட்டுள்ளதோடு பொது நினைவுத்தூபியும் அடித்துடைக்கப்பட்டுள்ளது.
சுமார் 2000 கிலோவுக்கு அதிகமான எடையை கொண்ட நினைவுக்கல் கனரக வாகனங்களை கொண்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இரவிரவாக அப்பகுதி முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்ததாகவும் இராணுவ வாகனங்கள் நடமாடியதாகவும் அயலில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.





குறித்த விசமச் செயலில் இராணுவத்தினரும் பொலிஸாருமே ஈடுபட்டதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு தெரிவித்துள்ளது.







