இலங்கையில் மேலும் ஒன்பது பேர் கொரோனாவுக்குப் பலி!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 696 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று புதிதாக 1891 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)