புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண த.தே.கூ. உறுப்பினரால் ஒரு இளம் குடும்பம் தற்கொலைக்கு ஆயத்தமா?? (Photos)

இளம் குடும்பஸ்த்தர் ஒருவரின் முகப்புத்தகத்தில் வெளியான பதிவினை அப்படியே தந்துள்ளோம்….

எமக்கு எதிராக கருத்துகள் பரப்பியும் எமக்கெதிராக தொடர்ந்து செயற்பட்டு வருபவர்களுக்கு விளக்கம் கொடுக்க எம் மனம் விரும்பவில்லை…. ஆனால் எங்களில் அக்கறையோடு அன்பு வைத்து அரவணைத்து எமக்காக கண்ணீர் சிந்திய சில அன்பு உள்ளங்களிற்காக இந்த பதிவு:-
1.
எனது அப்பாவை பொறுத்தவரையில் “உங்க பெடியன் ஜனாதிபதியை சுட்டு போட்டான்” என்று சும்மா வேடிக்கையாக சொன்னாலே:- ஓ……. அவன் செய்திருப்பான்… அவன் தான் செய்திருப்பான் என்று கூறும் ஒரு ஜாதியான நல்ல அப்பா.(வரப்பிரசாதம்)
2.
2010’ம் ஆண்டு தொடக்கம் 2014’ம் ஆண்டு வரை தென்மராட்சியில் தமிழ் தேசிய கூத்தமைப்பின் வளர்ச்சிக்கு வேலை செய்தேன்…. அவர்களின் தடம் மாற்றத்தால் நேரடியாக எதிர்த்து முரண்பட்டு வெளியேறினேன்…..
அப்போ பிடிச்சிட்டு எனக்கு சனியன் இப்போ வரை என்னை கொல்ல நிக்குது……
3.
கூத்தமைப்பை எதிர்த்ததால் வந்த வினை:-
2014-11–25’ம் திகதி அன்று பயங்கரவாத தடுப்பு பிரிவினர்(T.I.D) உள்பட 60′ ற்கு மேற்பட்ட இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களினால் பொய் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கையிலுள்ள அனைத்து சிறையிலும் போட்டு எடுத்தாங்கள்…. 4’ம் மாடி உள்பட…….
4.
அதன் பின் விடுதலைபெற்று வந்து எனது கைதுக்கு காரணமான கூத்தமைப்பின் தென்மராட்சி முக்கிய புள்ளியின் முகத்திரையை கிழித்தெறிந்தேன். Kopi Kopika
என்ற பேக்’ஜடி மூலம் ஓப்பிணா அவர் கதைச்சதை வெளியிட்டு……
5.
இவற்றின் எதிரொலி:- படத்தில் உள்ள டேனுஜாவை அழைத்து வந்து அமைதியான வாழ்க்கை பாதையில் சென்ற போது 5 மாதம் கூட இல்லற வாழ்வு நிறைவு அடையாத நிலையில் திட்டமிட்டு போடப்பட்ட வெளிநாட்டிற்கு ஆட்கள் நான் கடத்தினேன் என்ற வழக்கில் 10 மாதம் விளக்கமறியல் சிறை வாசம்……(இப் பதிவால் பேக் ஜடி’கள் மூலம் கூத்தமைப்பின் வால்பிடியள் கேவலமாக கருத்துகள் பதிவிடலாம்…
எதிர் கொள்ள நான் தயார்….. தனிப்படவும் சட்ட ரீதியாகவும்….)
6.
இவற்றின் மத்தியில் டேனுஜா வீட்டில் என்னையும் எனது வீட்டில் டேனுஜாவையும் ஏற்றுக்கொள்ளாத அவலநிலையிலேயே இத்தனை சவால்களுக்கும் முகம் கொடுக்கின்றோம்…
7.
பின்னர் கச்சாயில் காதல் ஜோடிக்கு போலீஸ்மூலம் திருமணம் செய்து வைத்த காரணத்தால் பெண் வீட்டார் திருட்டு குற்றம் என்னில் சாட்டினார்….
8.
அதே கச்சாய் பிரச்சனையின் தொடர் எதிரொலி பெண் வீட்டாரால்:- நான் ஊரில் இருந்து ஒதுங்கி வசித்த செம்பியன்பற்று மாமுனையில் என்மீதும் டேனுஜா மீதும் கொலைவெறி தாக்குதல் மற்றும் கொள்ளை சம்பவம்……
(அனைத்து சம்பவங்களின் பின்னணியில் கூத்தமைப்பின் தென்மராட்சி முக்கிய புள்ளியின் பங்களிப்புக்கள்)
9.
தொடர்ச்சியாக:- விலை போன பளை போலீஸ் எம்மை பிரிக்க நிற்கும் டேனுஜா’வின் தாய் தந்தையும் Jekan Sakunthala Jekan Sakunthala

மாமுனை வாழ் கிராம மக்களை எமக்கு எதிராக தூண்டி விட்டு நெருக்கடி கொடுக்கிறார்கள்…..
10.
முன்னர் நான் தலையிட்ட பிரச்சனைகள் இப்போது என்னை அமைதியாக வாழவிடாது தற்கொலை செய்யும் மன நிலைக்கு இருவரையும் தள்ளுகிறது…….
“(வாழ்க்கையில் பிரச்சனை இருக்கலாம்…
ஆனால் பிரச்சனையில் தான் என்ர வாழ்க்கையே இருக்கு…. என்னை அடிக்க ஆயிரம் பேரு நெனைப்பாங்க என்னை அழிக்க நெனைக்கிறது ஒருத்தர் மட்டும் தான் அவர் கூத்தமைப்பின் தென்மராட்சி முக்கிய புள்ளி……)”

நன்றி

வீரசிங்கம் சுலக்சன்

 

May be an image of 10 people, including வீரசிங்கம் சுலக்சன், people standing and outdoors