இன்றைய இராசிபலன்கள் (25.04.2021)

மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர் களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும், பழைய சொந்தங்கள் தேடி வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர்யோகம் கிட்டும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுய ரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். நன்மைகள் ஏற்படும் நாள்.

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதிய நட்பால் உற்சாக மடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். பழைய பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் அலைக்கழிக்கப்படுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். அமோகமான நாள்.

தனுசு: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

மகரம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.

கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நெருங்கியவர் சிலர் உங்களை உதாசீனப்படுத்திப் பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)