இந்தியாவிலிருந்து வந்த றொய்டர் செய்தி நிறுவன ஊடகவியலாளர் நீர்கொழும்பில் கைது!! நடந்தது என்ன?
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து தற்கொலைக் குண்டு வெடிப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க முயன்ற றொய்ட்டர் செய்தி முகவர் நிறுவனத்தின் ஊடகவியலாளர் ஒருவர் நீர்கொழும்பு கத்தானைப் பகுதியில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
குறித்த ஊடகவியலாளர் இந்தியாவில் இருந்து வந்து இலங்கையில் ஊடகவியலாளர் என தன்னை தகவல் திணைக்களத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளாது செய்தி சேகரிக்க முற்பட்டுள்ளார். அத்துடன் கந்தானைப் பகுதி ஒன்றில் உள்ள பாடசாலையில் செய்தி சேகரிக்க முற்பட்ட போது இவர் முஸ்லீம் இனத்தவர் என்பதனால் சந்தேகம் கொண்ட பொலிசார் இவரைக் கைது செய்ததாகத் தெரியவருகின்றது.
இதே வேளை இவர் வெளிவிவகார அமைச்சில் தன்னைப் பதிவு செய்தே இலங்கைக்கு வந்ததாகவும் வெளிவிவகார அமைச்சே இவர் தொடர்பான தகவல்களை தகவல் திணைக்களத்துக்கு அனுப்பவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (02) பகல் 12.30 மணியளவில் கடான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றினுள் அனுமதியில்லாமல் நுழைய முற்பட்ட சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஈராக் நாட்டவரான குறித்த நபர் சர்வதேச ஊடகம் ஒன்றின் புகைப்பட கலைஞராக கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் இருந்து குறித்த ஊடகத்தின் சார்ப்பாக இலங்கைக்கு வந்துள்ளதாக சித்தீகீ அஹமட் தானிஸ் (Sibdiqui Ahamad Danish) எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 21 ஆம் திகதி கட்டுவாபிட்டிய தேவாலயாத்தில் உயிரிழந்த மேரிஸ்டெல்ல பாடசாலையின் மாணவன் ஒருவரின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் பாடசாலையில் இருந்த பெற்றோர்கள் 119 இலக்கத்திற்கு அழைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.