நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு!! சற்று முன்அபாய கட்டம்!!
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
விவேக்கிற்கு இதய அடைப்பு ஏற்பட்டதற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை. இதய அடைப்பு ஒரே நாளில் உருவாகாது. இதே மருத்துவமனையில், இதய பாதிப்பு உடைய மற்ற நோயாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்கள் உடல்நிலையில் எந்த பாதிப்பையும் கொரோனா தடுப்பூசி ஏற்படுத்தவில்லை.
ஒரே நாளில் யாருக்கும் இதய அடைப்பு ஏற்படாது.
தற்போது விவேக்கின் உடல்நிலை அபாயக்கட்டதில் உள்ளது. அடுத்த 24 மணி நேரம் கழித்துத்தான், அவரது உடல்நிலை பற்றித் தெளிவாகக் கூறமுடியும்.’ என்று கூறியுள்ளார்.
