யாழ் அரியாலை விபத்தில் சகோதரன் முன் சிறுவன் தலை நசுங்கிப் பலி!!(Photos)

யாழ். அரியாலை பகுதியில் இன்று இடம் பெற்ற விபத்தில் சகோதரனின் கண்முன்னே எட்டு வயது சிறுவன் தலை நசுங்கி பலியான சோகம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை(14.04.2021) அரியாலை நாவலர் வீதியில் (ஸ்ரான்லி கல்லூரிக்கு அருகில்) மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு எட்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனும் சகோதரரும் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும்போது தவறிவிழுந்துள்ள நிலையில் அவ்வழியால் வந்த மோட்டார் சைக்கிள் தலைமீது ஏறியதால் மரணம் நிகழ்ந்துள்ளதாக அறியப்படுகின்றது.

சிறுவனின் உடல் யாழ்போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

error

Enjoy this blog? Please spread the word :)