கனடாவில் இலங்கையரைக் கொன்று தோட்டத்தில் புதைத்து தண்ணீர் ஊற்றி பராமரித்த பயங்கரம்!!

கனடாவில் இலங்கையைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேரை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கேரன் மற்றும் ராஸ்மித் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டின் அருகே வசிப்பவர் பிரம்மாண்டமான தோட்டங்களை உருவாக்கும் ஆர்த்தர்(65). இவர் சில தினங்களுக்கு முன்பு தனது இயந்திரங்களை கேரன் வீட்டு தோட்டத்தில் வைக்க அனுமதி கேட்டுள்ளார். இந்தக் கொலைகள், 2019ம் ஆண்டு இடம்பெற்ற போதும், இது தொடர்பான விடையங்கள் மற்றும் இலங்கை நபர்கள் என்பது போன்ற விடையங்கள் நேற்றைய தினமே வெளிவந்துள்ளது.
மேலும் கேரன் தோட்டங்களையும் பராமரிப்பதாக கூறியுள்ளார். இதனால் கேரன் மறுப்பு தெரிவிக்காமல் சம்மதித்துள்ளார். இந்நிலையில் திடீரென கேரன் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் அவர்களது தோட்டத்தை சோதனையிட அனுமதி கேட்டுள்ளனர். அப்போது ஆர்த்தர் ஓரினச்சேர்க்கை கிராமத்தை சேர்ந்த 8 பேரை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி புதைத்து அதன்மேல் தோட்டம் பதித்து இருந்தது தெரியவந்தது.

இதனைக் கண்டதும் கேரனும் அவரது கணவரும் அதிர்ந்து போய் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அந்த உடல்களை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கேரன் கூறுகையில் தாங்கள் இவ்வளவு நாட்களாக தண்ணீர் ஊற்றியது செடிகளுக்கு அல்ல பிணங்களுக்கு என்றும் இதனை கண்டதும் தங்களின் உடல்கள் நடுநடுங்கியது எனவும் கூறினார். இதேவேளை இறந்த 2 இலங்கை நபர்களும் ஓரினச் சேர்க்கையாளர்கள் தான் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

error

Enjoy this blog? Please spread the word :)