வில்பத்து தேவாலயத்தின் மீது தாக்குதல்!! மீண்டும் தொடங்கியது வெறி!! (Photos)
வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள சிறப்பு மிக்க தேவாலயமாக உள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தேவாலயத்தில் குறிப்பாக ஒவ்வொரு வருடமும் புனித அந்தோனியாரின் திருவிழாவை சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றினைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இங்கே திருவிழாவின் முன் தினங்களில் மக்கள் அங்கு சென்று சிறிய விடுதிகள் அடைத்து மாலை நேரங்களில் வழிபாடுகள் நடாத்தி திருவிழாவை கண்டு கழித்து வருகின்றார்கள் . இந்த அற்புதமான தேவாலயமான பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் காணப்பட்ட புனித அந்தோனியாரின் திருச்சுருபம் இனம் தெரியாத விசமிகளினால் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத்தளத்தின் மீதான தாக்குதல் மக்கள் நடமாட்டமில்லாத நேரம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் கத்தோலிக்க மதத்தையும்,தேவாலயங்களையும் குறிவைத்து தாக்கும் முயற்சி நடந்தேறி வருகின்றமையானது கத்தோலிக்க மக்கள் மத்தியில் ஒருவிதமான வெறுப்பை உருவாக்கி கொண்டு வருகின்றது.
பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் சுருவம் விசமிகளினால் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது.
வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமானது ஒரு சிறப்பு மிக்க தேவாலயமாக உள்ளது. இந்த தேவாலயத்தில் குறிப்பாக ஒவ்வொரு வருடமும் புனித அந்தோனியாரின் திருவிழாவை சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றினைந்து சிறப்பாக கொண்டாடி வருவதை நாம் அறிவோம். இங்கே திருவிழாவின் முன் தினங்களில் மக்கள் அங்கு சென்று சிறிய விடுதிகள் அடைத்து மாலை நேரங்களில் வழிபாடுகள் நடாத்தி திருவிழாவை கண்டு கழித்து வருகின்றமை நாம் அறிவோம். இந்த அற்புதமான தேவாலயமான பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் காணப்பட்ட புனித அந்தோனியாரின் திருச்சுருபம் இனம் தெரியாத விசமிகளினால் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத்தளத்தின் மீதான தாக்குதல் மக்கள் நடமாட்டமில்லாத நேரம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் கத்தோலிக்க மதத்தையும்,தேவாலயங்களையும் குறிவைத்து தாக்கும் முயற்சி நடந்தேறி வருகின்றமையானது கத்தோலிக்க மக்கள் மத்தியில் ஒருவிதமான வெறுப்பை உருவாக்கி கொண்டு வருகின்றது.
இருந்தும் எமது கத்தோலிக்க திருச்சபையும், மக்களிம் ஏனைய மதங்களை எப்போதும் மதித்து , அன்பு செலுத்தி ஒற்றுமையுடன் ஆன்மிகப்பணிகளை முன்னெடுக்கும் என்பதில் எந்தவிதமான அச்சமும் கொள்ள தேவை இல்லை என்பதை கூறிநிற்கின்றோம்.