முல்லைத்தீவு விதானையின் தில்லு முல்லு -மனைவி கைது (Photos)
முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் கருவேலன்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் மானுருவி பகுதியில் அனுமதிப்பத்திரம் அற்ற காணி ஒன்றில் சட்டவிரோதமாக கிராம அலுவலர் ஒருவரால் பாரிய அளவில் கிரவல் அகழ்ந்து குவிக்கப்பட்ட நிலையில் களத்தில் குதித்த ஒட்டுசுட்டான் பொலிஸார் அங்கு சட்டவிரோதமாக அகழ்ந்து குவிக்கப்பட்டு களஞ்சியப்படுத்தியிருந்த சுமார் 750 டிப்பர் லோட் கிரவலை மீட்டதுடன் காணிக்கு உரிமை கோரிய கிராம அலுவலரின் மனைவியை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மனைவி மற்றும் கிராம அலுவலரிடம் பொலிஸார் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.



