Home புதினங்களின் சங்கமம் யாழில் பல்கலை மாணவி, வர்த்தகர்கள் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு கொரோனா!

யாழில் பல்கலை மாணவி, வர்த்தகர்கள் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு கொரோனா!

யாழ். நகர் பகுதி வர்த்தகர்கள் ஆறு பேர், பல்கலைக் கழக மாணவி உட்பட ஒன்பது பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் இன்று (மார்ச்-30) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர். கேதீஸ்வரன் அருவிக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் 291 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். நகர் பகுதி வர்த்தகர்கள் – ஆறு பேர்,

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் – இருவர்,

யாழ். பல்கலைக் கழக மாணவி என ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை

கொழும்பு ஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்தில் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 07 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்று தொற்றுக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வடக்கில் 29 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்புக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 320 பேரின் மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் யாழ்ப்பாணம் நியூ மாக்கற் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்பாணத்தில் யாழ்.போதனாவில் 07 பேர் (தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் 06 பேர், வெளிநோயாளர் பிரிவில் ஒருவர்)

யாழ்.மாநகர எல்லைக்குள் 157 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 07 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலியில் – 02 பேர் (ஒருவர் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வவுனியா மாணவி, தனிமைப்படுத்தலில் இருந்தவர்)

உடுவில் பிரதேசத்தில் – 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அறிகுறியுடன் சென்ற ஒருவர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவர் என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.