கணவரால் கொல்லப்பட்டு நீர்த்தேக்கத்தில் வீசப்பட்ட பெண்!! (Video)
இலங்கையில் வீட்டு வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகளவில் வீட்டு வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை பதிவாகி வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வெள்ளிக்கிழமை தலாவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இந்த பெண்ணின் மரணம் தொடர்பில் நடத்திய விசாரணைகளின் போது இந்தப் பெண் கொலை செய்யப்பட்டு நீர்த்தேக்கத்தில் வீசப்பட்டுள்ளமை தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அக்கரபத்தனையைச் சேர்ந்த 28 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளாதாக குறிப்பிடப்படுகிறது.
குடும்பத்தகராறு காரணமாக 30 வயதான கணவர் இந்தப் பெண்ணை படுகொலை செய்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதிகளவில் வீட்டு வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குடும்பத் தகராறு மற்றும் வீட்டு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் காவல் நிலையங்களை அணுகுவதன் மூலம் கொலைகள், மரணங்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

