நாடுகடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யேர்மனியில் தமிழர்கள் போராட்டம்!

அகதி தஞ்சம் கோரி விண்ணப்பித்த நிலையில் உள்ள தமிழர்களை நாடுகடத்தும் யேர்மனியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து யேர்மன் வாழ் ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு போராட்டத்தை நேற்றைய தினம் முன்னெடுத்திருந்தனர்.

தமிழர்களை நாடு கடத்தும் ஜோ்மனிய அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரென் (Büren) மற்றும் போர்ப்ஷைம் (Pforzheim) தடுப்புக்காவல் முகாம்களுக்கு முன்பாக நேற்று நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜேர்மனியில் தஞ்சம் கோரிய 100-க்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவா்களை எதிர்வரும் (நாளை) 30-ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நோர்த்ரெய்ன்-வெஸ்ட்பாலன் (Nordrhein-Westfalen) மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க் (Baden-Württemberg) ஆகிய இடங்களில் அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடுகளைச் சோதனையிட்ட ஜேர்மனிய அதிகாரிகள், அங்கு விசா இன்றித் தஞ்சம் கோரியிருந்தவர்களை உரிய அனுமதியைப் பெற வருமாறு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனை நம்பி பொலிஸார் அழைத்த இடங்களுக்குச் சென்றவர்கள் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஏறக்குறைய 31 தமிழர்கள் டஸ்ஸெல்டார்பிலும், 50 பேர் பிராங்பேர்ட்டிலும், 11 பேர் ஸ்டட்கார்ட்டிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

ஜேர்மனிய அதிகாரிகளின் இந்த தீடீர் தேடுதல் மைற்றும் கைது நடவடிக்கைகள் ஜேர்மன் தமிழ் சமூகம் மற்றும் சாவதேச தமிழ் புலம்பெயர்ந்தோர் சமூகத்தினரிடையே அதிர்ச்சியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் ஜோ்மனிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களைத் திருப்பி அனுப்பும் முடிவைக் கைவிடுமாறு வலியுறுத்தி புலம்பெயர் தமிழர்கள் அவா்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெரென் (Büren) மற்றும் போர்ப்ஷைம் (Pforzheim) தடுப்புக்காவல் முகாம்களுக்கு முன்பாக நேற்று நூற்றுக்கணக்கில் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்து இன்று திங்கட்கிழமையும் தமது எதிர்ப்பைப் பதிவு செய்யவுள்ளதாக ஜேர்மனிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

error

Enjoy this blog? Please spread the word :)