மோட்டார் சைக்கிளில் குதிரைச்சவாரி விட்ட சிங்கப் பெண்களிற்கு நேர்ந்த கதி!
உத்திர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் குதிரைச்சவாரி செய்த இளம் பெண்களிற்கு 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மோட்டார் சைக்கிள் சவாரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, பொலிசாரின் கண்ணிலும் வீடியோ பட்டது. இதையடுத்தே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஷிவாங்கி தபாஸ் என்ற இளம் பெண்ணும், மல்யுத்த வீராங்கனையாக இருக்கும் ஸ்நேகா ரகுவன்ஷி என்பவரும் இணைந்து இந்த மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டனர். ஸ்நேகா மோட்டார் சைக்கிள் ஓட்ட, அவர் தோளில் அமர்ந்தபடி, ஷிவாங்கி பயணித்திருக்கிறார், இதனை வீடியோவாக எடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். நெட்டிசன்களை இந்த வீடியோ கவர, அது வைரலானது. பலரும் ‘சிங்கப் பெண்ணே..’ என அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தாலும், பொலிசாரின் பார்வையில் பட்டதும், சிங்கப்பெண்களிற்கு அபராதம் விதித்தனர்.

