புதினங்களின் சங்கமம்

யாழில் கொரோனாவால் பெண் மரணம்!

யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் வசித்துவந்த வயோதிபப் பெண் ஒருவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

காய்ச்சல் உட்பட்ட கொரோனா அறிகுறிகளுடன் 75 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இருந்தபோதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

குறித்த பெண்மணி நிமோனியாவினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்து அறிக்கை தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை குறித்த பெண்ணின் சடலம் கோம்பையன்மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அருவிக்கு உறுதிப்படுத்தினார்.

குறித்த பெண்ணுடன் யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 03 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.