புதினங்களின் சங்கமம்

யாழ் கோட்டை இயக்கங்களால் முற்றுகை இடப்பட்ட காலத்தில் மார்பகத்தை மறைத்து ரவிக்கை !!

யாழ் நகரில் ஆஸ்ப்பத்திரி வீதியில் கொட்டடி நோக்கி நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறேன்.
சிக்னல் லைற் உள்ள சந்தியில் நின்ற போது நண்பரைக் கேட்டேன் ” இந்தச் சந்திக்கு ஓர் பழைய பெயர் உள்ளது. என்ன பெயர் எனக் கேட்டேன்.
” தெரியாது ” என்றார்.
பொன்னம்மா மில் சந்தி என்ற ஓர் பெயர் உள்ளது. முந்திய காலத்தில் இந்த சந்தியிலிருந்து தெற்காகத் திரும்பி யாழ் கோட்டைக்குச் செல்லும் போது வீதியின் மேற்காக ஒரு பெரிய மில் இருந்தது.
பொன்னம்மா மில் என அதற்குப் பெயர். எனது சிறுபராயக் காலத்தில் இந்த வீதி வழியாக வரும் போது பெரும் பரபரப்பாக மில் இயங்குவதைக் கண்டுள்ளேன்.
1985 இல் யாழ்ப்பாணக் கோட்டை இயக்கங்களால் முற்றுகை இடப்பட்ட காலத்தில் யாழ் நகர் மீது செல் மழை பொழ்ந்த காலத்தில் பொன்னம்மா மில் செயலிழந்துபோனது.
பிற்காலத்தில் அழிந்து போனது. 2009 இன் பின்பாக இக் காணி விற்கப்பட்டு விட்டது.
தற்போது பல கடைத் தொகுதிகள் அமைக்கப்பட்டு விட்டது.
மானிப்பாய் பிரதேசத்தில் ஓர் சந்திக்கு ரவிக்கைச் சந்தி எனப் பெயர் இருந்ததாம்.
ஒல்லாந்தர் காலத்தில் தமிழ் பெண்கள் சேலையைக் குறுக்குக் கட்டாக அணிந்து செல்லும் போது ஒல்லாந்தர் படைச் சிப்பாய்கள் சேட்டை விட்டார்களாம்.
இதனை ஒரு நாள் கண்ட ஒல்லாந்து தளபதி அந்தப் பிரதேச பெரியார்கள்,பெண்களை வரவழைத்து சந்தி ஒன்றில் கூட்டம் வைத்தாராம்.
பெண்கள் கௌரவம் காக்க மார்பகத்தை உடலின் மேற்பகுதியைமறைத்து ரவிக்கை( சாறி பிளவுஸ்) எனும் ஆடையை அணியுமாறு ஆலோசனை கூறினாராம்.
ரவிக்கை தைக்கும் ரெயிலர் கடையொன்றையும் அந்தச் சந்தியில் அமைத்தாராம். ஒல்லாந்தரால் தான் இன்னாளில் சாறி பிளவுஸ் எனப்படும் அந்நாளைய ரவிக்கை தமிழ் பெண்கள் அணியக் கற்றுக் கொண்டனர் போலும்.
அதனால் அந்தச் சந்திக்கு நீண்டகாலமாக ரவிக்கைச் சந்தி என்றொரு பெயர் வழங்கப்பட்டதாம்.
பின்னாளில் இப் பெயர் வழக்கமற்றுப் போனது.
அது போல புளியடிச் சந்தி, திரளிகடைச் சந்தி, மினக்கெட்டான் வேம்படிச் சந்தி என இடத்திற்கு இடம் சந்திகளது பெயர்கள் இருந்தன.
பல காலவெள்ளத்தில் மறைந்து பொய் விட்டன.
பனாட்டுப் போடுவதையே நாகரீகமற்ற தொழில் என நினைக்கும் இன்றைய சந்ததி அவற்றைச் சொல்லவே…….. மாட்டாது.
ஆனால் அவை எமது மண்ணின் வரலாறு. பல்கலைக்கழக மட்டத்தில் மாணவர்கள் பலவித ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். பிரதேச ரீதியாக இவை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு புகைப்பட ஆதாரத்துடன் ஆவணப்படுத்த வேண்டும்.
இன்று கூட்டல் விருத்தி தொடரில் முளைக்கும் புத்தர் சிலைகள் நாளை பெருக்கல் விருத்தி தொடரில் முளைக்கும் போது எமது இனத்தின் தனித்துவத்தைக் காப்பாற்ற இவைஆதாரங்களாக இருக்கும்.
யாழ் நகரில் சிங்கள மகாவித்தியாலயம் இருந்த காணிக்கு முன்பாக இருந்த வளவு சொதி வளவு எனப் பெயர் பெற்றிருந்தது.
எமது சிறுபராயத்தில் அக் காணியினுள் கிரிக்கெற் உட்பட பல விளையாட்டுக்களை விளையாடியதைக் கண்டுள்ளேன்.
இன்று அக்காணி இராணுவ முகாமாகி விட்டது.
இப்படியாக ஊருக்கு ஊர் சந்திகள் இடங்களின் பல பெயர்கள் வழக்கமற்றுப் போனது.
பேராசிரியர் இ.பாலசுந்தரம் யாழ்ப்பாணத்து இடப் பெயர்கள் தோன்றிய காரணங்கள் குறித்து 1985 இல் அருமையான
நூல் ஒன்றை வெளியிட்டார்.
அதனை 1991 இல் வாசித்துள்ளேன். .
அது போல எமது வடக்கு கிழக்கின் பாரம்பரிய தமிழ் கிராமங்களின் பெயர்கள் தோன்றிய விதம் ,சந்திகள் பெயர் பெற்ற விதம் ஆகியவை ஆவணப்படுத்தப்படல் வேண்டும்.
எத்தனையோ விடயங்களுக்கு காசு தண்ணீராகச் செலவழிகிறது.
அதில் ஒரு 5 வீதத்தை இவற்றுக்குச் செலவிடுங்கள். எவ்வளவோ பயனுள்ள பணிகளைச் செய்யலாம்.