Vampan memes

முன்னாள் போராளியைத் தாக்கிய வவுனியா தாவூத் ஹோட்டல் முதலாளி எங்கே??

வவுனியா கனகராயன்குளத்தில் அமைந்துள்ள சர்சைக்குரிய தாவூத் உணவகத்தில் இருந்து பல்வேறு
வெடிபொருட்கள் நேற்று மீட்கபட்டுள்ளன.

வவுனியா குற்றதடுப்புபிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து
கனகராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள தாவூத் உணவகத்தை, இராணுவம் மற்றும் விசேடஅதிரடிப்
படையினருடன் இணைந்து பொலிசார் சோதனை மேற்கொண்டனர்.

இதன் போது தாவூத் உணவகத்தின் விடுதி மற்றும் மலசல கூடப்பகுதிகள் சோதனையிடப்பட்டது.
மலசலகூடம் அமைந்துள்ள பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு
கைக்குண்டு, மூன்றுமிதிவெடி, பதினைந்து தோட்டாக்கள், இரண்டு ஆர்பிஜி செல்கள் என்பன
கைப்பற்றப்பட்டுள்ளன.

உணவகத்தின் உரிமையாளர் தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரை கைதுசெய்வதற்கான
நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த உணவகம் அமைந்துள்ள காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க மறுக்கிறார்கள் என்றும்,
காணியை திரும்ப கேட்ட உரிமையாளர்கள் தாக்கப்பட்டதாகவும்ஈ பொலிசார் காணி உரிமையாளரான
முன்னாள் போராளியை தாக்கியதாகவும் சர்ச்சை எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.