Home புதினங்களின் சங்கமம் யாழ் வடமராட்சி பொலிஸ் உத்தியோகத்தர் கிளிநொச்சி விபத்தில் பலி!!(Video)

யாழ் வடமராட்சி பொலிஸ் உத்தியோகத்தர் கிளிநொச்சி விபத்தில் பலி!!(Video)

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிகண்டியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்
ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி – பரந்தன் இடையே வயல்வெளிப் பகுதியில் நேற்று நள்ளிரவு
இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மேரி ஜாக்சன் அன்ரனி (வயது -30) என்ற
பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த போது மாடு ஒன்றுடன்
மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார் என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

May be an image of 1 person, beard and standingMay be an image of childMay be an image of 1 person, motorcycle and outdoors