புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம் கார்கிள்ஸ் திரையரங்க ஊழியர்கள் ஏழு பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் கார்கிள்ஸ் திரையரங்கில் பணியாற்றும் ஊழியர்கள் ஏழு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்.பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் நடைபெற்ற பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் திரையரங்கு மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.